Our Feeds


Saturday, March 18, 2023

ShortNews Admin

வசமாக மாட்டிய திருட்டுக் கும்பல் - ப்லேன் பண்ணி தூக்கிய பொதுமக்கள்.



யாழ்ப்பாணம் – காரைநகர் கோவளம் பகுதியில் திருட்டில் ஈடுபட்ட ஐவர் அடங்கிய கும்பலை மக்கள் மடக்கிப் பிடித்து ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.


சுழிபுரம் பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த ஐவர் அடங்கிய இளைஞர் குழு ஒன்றையே மக்கள் மடக்கிப் பிடித்து நையப் புடைத்துள்ளனர்.


இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

காரைநகர் கோவள பகுதியில் வீடுகளில் உள்ள வீட்டு நிலைகளை திருடிய சந்தர்ப்பத்தில் அப்பகுதிமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட பின்னர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.


இதேவேளை, காரைநகர் மணற்காடு அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் நேற்றைய தினம் கோவளப்பகுதி மக்களின் திருவிழா இடம்பெறுகின்ற நிலையில் குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


மக்களால் நையப்புடைக்கப்பட்டவர்களில் ஒருவர் காரைநகர் பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »