2023ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதல் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் நாளை (27) திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கமைய, கல்விச் செயற்பாடுகள் நாளை முதல் ஏப்ரல் 4ஆம் திகதி வரை நடைபெறும்.
அதனைத் தொடர்ந்த ஏப்ரல் 5ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை புத்தாண்டு விடுமுறை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.