கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூனுமலேவத்த பிரதேசத்தில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் களுக்கல பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்த சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.