கொரோனா தொற்றின் பின்னர், சீனாவின் ஷாங்காய் நகரில் இருந்து முதன்முறையாக சீன சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று இலங்கைக்கு வந்துள்ளது.
நேற்று (மார்ச் 10) இரவு வந்த 181 சீன சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட இந்தக் குழு 7 நாட்கள் இலங்கையில் தங்கவுள்ளது.
இவர்கள் நேற்று இரவு 06.51 மணிக்கு ஷாங்காய் நகரில் இருந்து சைனா ஈஸ்டன் ஏர்லைன்ஸ் எம்.யூ. – 231 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhen Hong மற்றும் சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினரும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்திற்கு வருகை தந்திருந்தனர்.