Our Feeds


Sunday, March 12, 2023

SHAHNI RAMEES

உழவு இயந்திர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!

 

மட்டக்களப்பு ஆயித்தியமலை வயல் பகுதியில் உழவு இயந்திரத்தில் வயலை உழுது கொண்டிருந்த போது உழவு இயந்திரம் தலைகீழாக கவிழ்ந்ததில் அதனை செலுத்திய சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (11) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக ஆயித்தியமலை பொலிசார் தெரிவித்தனர்.



ஆயித்தியமலை நெல்லூரைச் சேர்ந்த 34 வயதுடைய தர்மதாசா சதீஸ்வரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



குறித்த வயலில் சம்பவதினமான நேற்று பிற்பகல் உழவு இயந்திரத்தால் உழும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது வயலில் உழவு இயந்திரத்தின் பின்பக்க ரயர்கள் புதைந்ததையடுத்து உழவு இயந்திர முன்பகுதி மேல் எழுந்து தலைகீழக கவிழ்ந்ததில் அவர் கீழே விழுந்ததில் கலப்பையில் தலை அடிபட்டு படுகாயமடைந்ததையடுத்து சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.



இதனையடுத்து அவரை பொலிசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.



இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »