ஜப்பானில் நிர்மாணத் துறையில் இலங்கை ஆண்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஆர்வமுள்ளவர்கள் 10 மார்ச் 2023 ஆம் திகதி மாலை 04.30 மணிக்குள் அல்லது அதற்கு முன் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
விண்ணப்பங்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.slbfe.lk இல் காணலாம் மற்றும் தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் மின்னஞ்சல் titp@slbfe.lk முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.