குடிவரவு- குடியகல்வு சட்டவிதிகளை மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் வழக்கு தொடர்பில் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வாக்குமூலங்களின் பிரதிகளையும் எதிர்வரும் 23ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் இன்று (02) உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில் தலையிடுமாறு சட்டமா அதிபருக்கு எழுத்துமூல அறிவித்தல் விடுக்கப்படும் என நீதிவான் திறந்த நீதிமன்றில் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பான நீதிவான் விசாரணைகள் இன்று நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.