அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் டிக்டொக் செயலிக்கு தடை விதித்திருந்தன.
அதாவது, அந்த நாட்டின் அரசாங்க அலுவலகங்களில் அரசாங்கத்திற்கு சொந்தமான கணினி, கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட மின் சாதனங்களில் டிக்டொக் செயலியை வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இங்கிலாந்து அரசாங்க அலுவலக தொலைபேசிகளில் டிக் டாக் செயலிகளை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஏற்கனவே இதே தடையை விதித்தது குறிப்பிடத்தக்கது.