லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெராம் தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
இன்று முற்பகல் 10 மணியளவிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
தொழிலாளர்கள் ,தோட்டத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது அதில் கூடு கட்டி இருந்த குளவிகள் கலைந்து தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலுக்கு இலக்கான 72 வயது 5 பிள்ளைகளின் தந்தையான எட்வின் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஏனைய இருவரும் லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது லிந்துலை வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
கௌசல்யா