சீன தலைநகர் பெய்ஜிங்கில் வானில் இருந்து திடீரென புழு மழை பெய்ததால் மக்கள் பீதி அடைந்தனர்.
சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உள்ள சாலையில், நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள வாகனங்கள் மீது திடீரென புழுக்கள் மழையாக பொழிந்து நிரம்பி கிடந்த காட்சிகள் வெளிவந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளன.
அதுபற்றிய வீடியோவில் வரிசையாக நிற்கும் கார்களின் மீது பெரிய, தடிமனான அளவுள்ள, பழுப்பு நிறத்தில் வளைந்தும், நெளிந்தும் படர்ந்து காணப்படுகிறது.
இதற்கான காரணம் என்னவென இதுவரை தெரியாதபோதும், பலத்த காற்றில் அடித்து வரப்பட்டு இவை இந்த பகுதியில் மேலிருந்து கீழே போடப்பட்டு இருக்கும் என மதர் நேச்சர் என்ற அறிவியல் பத்திரிகை தெரிவிக்கின்றது.
எனினும், சீன பத்திரிகையாளரான ஷென் ஷிவெய் கூறுகையில்,’
வீடியோ போலியானது. நான் பீஜிங் நகரிலேயே இருக்கிறேன். சமீப நாட்களாக பெய்ஜிங்கில் மழைப்பொழிவே இல்லை’ என தெரிவித்து உள்ளார். புழுக்கள் கீழே விழுவது இயல்பானது என்றும் வசந்த காலத்தின்போது இதுபோன்று ஏற்படும் என்று சிலர் கூறுகின்றனர். ஒரு சிலர், அவை புழுக்கள் அல்ல என்றும் அவை கம்பளிப்பூச்சிகள் என்றும் கூறுகின்றனர்.