அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சிறுவர் பிரிவில் முன்னர் கடமையாற்றிய நான்கு சிறுவர் வைத்திய நிபுணர்கள் இடம்பெயர்ந்ததையடுத்து, அந்த வைத்தியசாலையின் சிறுவர் பிரிவு மூடப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
நாட்டில் சுகாதார சேவைகளை முடக்கக்கூடிய இந்த நிலைமை குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொடர்ந்து எச்சரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த வருடத்தில் நிபுணர்கள் உட்பட குறைந்தது 600 முதல் 700 மருத்துவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
சுகாதார அமைச்சு ஒவ்வொரு மாதமும் மருத்துவர்களிடமிருந்து குறைந்தது 40 இடம்பெயர்வு விண்ணப்பங்களைப் பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.