மக்கா யாத்திரைக்காக வழங்கப்படும் விசாக்கள் கடந்த வருடங்களைப் போன்று விற்பனை செய்யப்பட மாட்டாது எனவும், யாரேனும் இதற்கு முரணாக செயற்படுவார்களாயின் உடனடியாக அமைச்சுக்கு அறிவிக்குமாறும் புத்தசாசன மற்றும் மத கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்கா யாத்திரைக்காக நாட்டை விட்டு வெளியேறும் முஸ்லிம்களுக்கு நியாயமான சேவைகளை வழங்க உரிய ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் ஸ்தாபிக்கப்பட்ட புதிய அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.