Our Feeds


Saturday, March 11, 2023

SHAHNI RAMEES

மேற்பார்வை குழுக்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம்...!

 



பாராளுமன்ற மேற்பார்வை குழுக்கள் சிலவற்றுக்கான புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.



சர்வதேச தொடர்புகளுக்கான பாராளுமன்ற மேற்பார்வைக் குழுவின் தலைவராக நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.



பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை சமப்படுத்துவதற்கான பாராளுமன்ற மேற்பார்வை குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட நியமிக்கப்பட்டுள்ளார்.



சேவைகள் மற்றும் பொருட்கள் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான தெரிவுக்குழுவிற்கான புதிய தலைவராக புத்திக பத்திரண நியமிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு அறிவித்துள்ளது.



எரிசக்தி மற்றும் போக்குவரத்து தொடர்பான பாராளுமன்ற மேற்பார்வை குழுவின் தலைவராக நாலக்க பண்டார கோட்டேகொட நியமிக்கப்பட்டுள்ளார்.



அத்துடன், ஒழுக்கம் மற்றும் பாராளுமன்ற சிறப்புரிமைகள் தொடர்பான பாராளுமன்ற மேற்பார்வைக் குழுவின் தலைவராக சமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.



தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற மேற்பார்வைக் குழுவின் தலைவராக சரத் வீரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.



மத விவகாரங்கள் மற்றும் சகவாழ்வுக்கான துறை மேற்பார்வைக் குழுவின் தலைவராக உபுல் மகேந்திர ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »