Our Feeds


Monday, March 20, 2023

SHAHNI RAMEES

கரடியை கட்டிப்பிடிக்கும் வேலைக்கு ஆட்கள் தேவை...!

 

அமெரிக்காவில், “கருப்பு கரடியை கட்டிப்பிடித்து பராமரிக்க ஆட்கள் தேவை” என, வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.



அமெரிக்காவின் நியு மெக்சிகோ மாகாணத்தில் உள்ள வன விலங்குகள் பாதுகாப்பு மையத்தில் கருப்புக் கரடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. பனிப் பிரதேசத்தில் வாழக்கூடிய இவற்றை பராமரிக்க ஆட்கள் தேவை என வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 



வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் இயற்கை வளப் பாதுகாப்பு, உயிரியல் அறிவியல் அல்லது அதைப் போன்ற படிப்புகளில் அனுபவம் அல்லது கல்வியைப் பெற்றிருக்க வேண்டும்.



கடினமான சூழ்நிலைகளை கையாள தெரிந்திருக்க வேண்டும். கரடிக் குட்டிகளை கட்டிப்பிடித்தபடி குகைக்குள் ஊர்ந்து செல்லக்கூடிய தைரியம் இருத்தல் அவசியம். நேர்மறையான அணுகுமுறை, வலுவான பணி நெறிமுறை மற்றும் நியூ மெக்சிகோ முழுதும் தொலைதூர இடங்களில் சாகச உணர்வுடன் பணியாற்றும் திறன் இருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »