Our Feeds


Wednesday, March 22, 2023

SHAHNI RAMEES

மஹிந்த மற்றும் பெசில் ஆகியோருக்கு எதிரான வெளிநாட்டுப் பயணத்தடை நீக்கம்..!

 

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக விதிக்கப்பட்ட பயணத்தடையை நீக்கி உயர் நீதிமன்றம் இன்று (22) தீர்ப்பளித்துள்ளது. 



குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்றக் குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.



அதற்கமைய, பிரதிவாதிகள் இருவருக்கும் வழங்கப்பட்ட பயணத்தடை இனி அமுலில் இல்லை என்பதை குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு தெரிவிக்குமாறு உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »