Our Feeds


Friday, March 24, 2023

ShortNews Admin

எலி மொய்த்த உணவு விற்பனை - ஹோட்டலுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு



மன்னார் நகரில் உள்ள உணவகம் ஒன்றில் சுகாதாரமற்ற மனித பாவனைக்கு பொருத்தமற்ற, எலி மொய்த்த உணவுகளை களஞ்சியப்படுத்தியும் விற்பனைக்காகவும் வைத்திருந்த குறித்த உணவகத்துக்கு எதிராக கடந்த புதன்கிழமை (23) மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணினையினால் மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.


மன்னார் நகரில் உள்ள குறித்த உணவகத்தில் தொடர்ச்சியாக சுகாதாரமற்ற மனித பாவனைக்கு பொருத்தமற்ற எலி மொய்த்த உணவுகள் களஞ்சியப்படுத்தியும், விற்பனைக்காக வைத்திருப்பது தொடர்பாகவும் உணவகத்தில் பிரைறைஸ் தயாரிப்புக்கான பணியின் போது எலி பாய்ந்து செல்லும் காணொளி வெளியாகியிருந்தன.


அதற்கமைவாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரிக்கு விடுக்கப்பட்ட பணிப்புரையின் பேரில் குறித்த உணவகம் பொது சுகாதார பரிசோதகர்களால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.


இதன் போது சுகாதாரமற்ற முறையில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற எலி மொய்த்த உணவுகளை களஞ்சியப்படுத்தியும் விற்பனைக்காக வைத்திருந்தமையும் கண்டறியப்பட்டது.


இதனைத் தொடர்ந்து மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உணவகத்துக்கு எதிராக 5 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டமைக்கு அமைவாக குறித்த உணவக உரிமையாளருக்கு 70,000 ரூபா தண்டப் பணம் செலுத்துமாறும் அதனை செலுத்த தவறும் பட்சத்தில் ஒவ்வொரு குற்றத்துக்காகவும் 3 மாதம் சிறை தண்டனையும் 29.03.2023 வரை வியாபாரத்தை தடை செய்து நீதவான் நீதி மன்றத்தினால் உத்திரவிடப்பட்டது.


மேலும் கைப்பற்றப்பட்ட உணவுப் பொருட்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.


இருப்பினும் குறித்த உணவகம் தொடர்சியாக சுகாதாரமற்ற உணவுகளை விற்பனை செய்வதுடன் அவ் உணவகம் சார்ந்து துர்நாற்றம் வீசுவதும் அடிக்கடி நடை பெறும் சம்பவங்கள் ஆகும் அதே நேரம் பொது சுகாதார பரிசோதகர்களால் அடிக்கடி சீல் வைக்கப்படும் உணவகமாக குறித்த உணவகம் காணப்படுகின்ற போதும் பொது மக்கள் தொடர்சியாக அதிக அளவில் குறித்த உணவகத்திற்கே சென்று உணவுகளை கொள்வனவு செய்வதை அவதானிக்க கூடியதாக உள்ளது


குறித்த உணவகத்திற்கு 70000 தண்டப்பணம் என்பது அவ் உணவகத்தின் வெறும் ஒரு நாள் வருமானமே எனவே சுகாதார அதிகாரிகள் தொடர்சியாக அவ் உணவகத்தை கண்காணிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »