துருக்கியில் தென்மேற்கு பகுதியில் உள்ள கோக்சன் மாவட்டத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவில் 4.6 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. துருக்கியில் கடந்த பெப்ரவரி மாதம் ஏற்பட்ட மிகப்பெரும் நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர்.
துருக்கியில் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்திற்கு பிறகு துருக்கியில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றது.