மஹரகம, கபூரிய்யா அரபுக் கல்லூரியில் கடந்த 07ம் திகதி இரண்டாம் முறையாக கல்லூரி பணிப்பாளர் சபையின் திட்டமிட்ட செயல்பாட்டினால் மின் வினியோகம் துண்டிக்கப்பட்ட நிலையில், கடந்த சனிக்கிழமை (11-03-2023) வக்பு நியாய சபையில் கல்லூரியின் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் கல்லூரி தரப்பில் இருந்து விடுக்கப்பட்ட விஷேட பிரேரனையை செவிமடுத்த நீதிபதி கல்லூரிக்கான மின்சாரத்தை வழங்குவதற்கான நடவடிக்கையை உடன் மேற்கொள்ளுமாறு உரிய தரப்பிற்கு எழுத்துமூல அறிவித்தலை வழங்குமாறு வக்பு நியாய சபை செயலாளரை வேண்டினார்.
இந்நிலையில் கபூரிய்யா அரபுக் கல்லூரியில் துண்டிக்கப்பட்டிருந்த மின்சார இணைப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.