சிரியாவின் அலேப்போ நகரில் இஸ்ரேலிய யுத்த விமானங்கள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளன.
சிரியாவின் 2 ஆவது பெரிய நகரான அலேப்போ கடந்த மாதம் துருக்கியில் ஏற்பட்ட பாரிய பூகம்பத்தினாலும் ஏற்கெனவே பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று அதிகாலை இஸ்ரேலிய போர் விமானங்கள் அங்கு தாக்குதல் நடத்தியதாக சிரிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
லட்டேக்கியா பிராந்தியத்தின் மேற்கு பகுதியில், அலேப்போ சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து, அதிகாலை 2.07 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.
இத்தாக்குதல் காரணமாக அலேப்போ நகருக்கான விமான சேவைகளும் நிறுத்தப்பட்டதாக சிரிய போக்குவரத்து அமைச்சு தெரவித்துள்ளது.
பூகம்பத்தினால் சிரியாவில் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்கான முக்கிய விமான நிலையமாக அலேப்போ விமான நிலையம் விளங்கியது.
'கடந்த மாதம் உதவிப்பொருட்களுடன் 80 விமானங்கள் அலேப்போவில் தரையிறங்கின. தற்போது விமான நிலையத்துக்கு ஏற்பட்ட சேதங்கள் திருத்தப்படாமல் விமானப் பயணங்கள் இடம்பெறுவது சாத்தியமில்லை என சிரிய போக்குவரத்து அமைச்சின் பேச்சாளர் சுலைமான் கலீல் கூறினார்.
உதவிப் பொருட்களுடன் வரும் அனைத்து விமானங்களும் டமஸ்கஸ் மற்றும் லட்டாகியா விமான நிலையங்களுக்கு திசை திருப்பப்படுகின்றன என சிரிய போக்குவரத்து அமைச்சு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
சிவில் விமான நிலையமொன்றை, இலக்குவைத்து தாக்குதல் நடத்தியமையும், பூகம்பத்தினால் பாதிக்கப்பட்டோருக்கான மனிதாபிமான சேவைக்கு பயன்படுத்தப்படும் விமான நிலையத்தை, இலக்குவைத்தமை இரட்டைக் குற்றம் என சரிய வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
இத்தாக்குதல் தொடர்பில் இஸ்ரேலிய இராணுவப் பேசச்hளர் ஒருவர் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார் என ஏஎவ்பி தெரிவித்துள்ளது.