கொழும்பு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் பொலிஸாரின் கண்ணீர்ப் புகைக்குண்டு தாக்குதலால் உயிரிழந்துள்ளதாகவே சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்கிழமை பல்கலைக்கழக மாணவர்களுடனான மோதலின் போது பொலிஸார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியதன் காரணமாகவே பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளதாக அவர் பாராளுமன்றில் தெரிவித்தார்.
பொலிஸாரின் கண்ணீர்புகை பிரயோகம் அந்தப்பகுதியை நிரப்பியதுடன் அருகில் உள்ள பாடசாலைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக பத்திரண தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடனான மோதலின் போது கொழும்பு பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொலிஸார் பலவந்தமாக நுழைந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.