கடந்த 7ம் திகதி கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் நடத்திய போராட்டத்தை கலைக்க வந்த இராணுவத்தினரின் கைகளில் இரும்பு மற்றும் மரத்தடிகள் இருந்ததா என்பதை கண்டறிய இலத்திரனியல் தடயவியல் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினர் குழுவொன்று இரும்பு மற்றும் மரத்தடிகளை எடுத்துச் செல்லும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவியதன் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரிகேடியர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பரவும் புகைப்படங்களை அடையாளம் காண விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து புகைப்படங்களும் பின்பகுதியில் இருந்து எடுக்கப்பட்டவை என்பதால் அதன் நம்பகத்தன்மையை தெளிவாக உறுதிப்படுத்த முடியாது என்றும், புகைப்படத்தில் குறிப்பிட்டுள்ளதால் இராணுவ வீரர்கள் கையில் தடிகளை பிடித்துள்ளனர் என்று உறுதியாக கூற முடியாது என்றும் அவர் கூறினார்.
அந்தப் படம் பழைய படமா அல்லது அன்றைய படமா என்பதைச் சரிபார்க்க அதிக நேரம் எடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.