2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் ஏற்படும் தாமதம் காரணமாக, மே மாதத்தில் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த க.பொ.த சாதாரண தர பரீட்சையை நடத்துவதில் தாமதம் ஏற்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, திங்கட்கிழமை (13) தெரிவித்தார்.
அமெரிக்க தூதுவர் ஜூலி சங்குடன், மட்டக்குளி புனித ஜோன்ஸ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற இலங்கை பாடசாலை உணவு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் மேற்குறிப்பிட்ட விடயத்தை தெரிவித்தார்.
உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள்களை மதிப்பிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ள காரணத்தால் பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.
உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிட எவ்வளவு நாட்கள் எடுத்துக் கொள்ளப்படுமோ, அது சாதாரண தர பரீட்சையை நடத்துவதில் தாமதத்தை ஏற்படுத்தும் என்றார்.