வரித்திருத்தம், கொடுப்பனவு வழங்கப்படாமை உள்ளிட்ட சில காரணிகளை முன்வைத்து இன்று ஒருநாள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க நீர் வழங்கல் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
எனினும், நிரேந்து நிலையங்களின் பணிகள் வழமை போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இன்றைய தினம்(23) அலுவலக சேவை, நுகர்வோர் சேவை உள்ளிட்ட எந்தவொரு சேவையும் முன்னெடுக்கப்படாதென நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தொழிற்சங்க இணை ஏற்பாட்டாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.