ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கோட்டே மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சந்திம நயனஜித் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு - கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று (28) ஆஜர்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த சம்பவத்தன்று குறித்த இடத்திற்கு 100 பேரை அழைத்துச் சென்றமை தொடர்பான ஒலிப்பதிவு தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.