ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றுவதற்காகவே தான் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார் என்ற எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதிலளித்துள்ளார்.
எனது நோக்கம் நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து காப்பாற்றுவதல்ல ராஜபக்சாக்களை காப்பாற்றுவதே என அவர்கள் - எதிர்கட்சியினர் தெரிவித்தனர் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நான் இலங்கை நெருக்கடியான பாதையை கடக்க உதவவில்லை நாமல் ராஜபக்சவை பாதுகாப்பாக அழைத்து செல்வதே எனது நோக்கம் எனவும் எதிர்கட்சியினர் தெரிவித்தனர் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஆனால் நான் இலங்கையின் பொருளாதாரத்திற்கு புத்துயுர் கொடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டேன் என்பதை சர்வதேச சமூகம் அங்கீகரித்துள்ளது எனதெரிவித்துள்ள ஜனாதிபதி எதிர்கட்சியினரின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் உறுதியாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.