திட்டமிட்டபடி பொதுத் தேர்தலை நடத்த பாகிஸ்தான் அரசுக்கு அந்நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"ஒரு நாட்டின் தலைவரை பதவியில் இருந்து அகற்றி தேர்தலை தாமதப்படுத்த அந்நாட்டு இராணுவம் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் கூட்டாக திட்டமிட்டுள்ளனர்" என்ற செய்திகள் வெளியாகிவந்த நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேர்தலை தடுக்க நிர்வாக, சிவில் மற்றும் இராணுவ அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று நாட்டின் தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, நாட்டின் பொதுத் தேர்தல் மே மாதம் நடைபெற உள்ளது.