2023ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணை ஏப்ரல் மாதம் 5ம் திகதி தொடங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதுகுறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 16ஆம் திகதி வரை முதல் பாடசாலை தேர்வுகள் நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சை காரணமாக 2023 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் பாடசாலை தவணை விடுமுறை ஒக்டோபர் 14 முதல் நவம்பர் 12 ஆம் திகதி வரை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மூன்றாம் பாடசாலை தவணை டிசம்பர் 23 முதல் 2024 ஜனவரி 1 வரை நடைபெறவுள்ள நிலையில், அனைத்து சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கும் பாடசாலை விடுமுறை வழங்கப்படவுள்ளது.
க.பொ.த சாதாரண தரத்திற்கு மே 13 மற்றும் 24 ஆம் திகதிக்கு இடையில் பாடசாலை மாணவர்களுக்கு மற்றுமொரு பாடசாலை விடுமுறை வழங்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கடிதங்கள் அனைத்து மாகாண பிரதம செயலாளர்கள், மாகாண கல்வி செயலாளர்கள், மாகாண கல்வி பணிப்பாளர்கள், வலய கல்வி பணிப்பாளர்கள் மற்றும் பிரிவேனா அதிபர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.