நாட்டில் இன்று முதல் அமுலுக்கு வகையில் முச்சக்கர வண்டிகளுக்கான பயணக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக
அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி முதலாவது கிலோமீற்றருக்கான நிலையான கட்டணம் 120 ரூபாவில் இருந்து 100 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த கிலோ மீற்றர்களுக்கான கட்டணம் 100 ரூபாவில் இருந்து 80 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு அலகுக்கான கட்டணம் 8 ரூபாவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.