பாதுகாப்பு கடமையில் இருந்த இராணுவத்திரை ஏமாற்றி அவரிடமிருந்த ரி.-56ரக துப்பாக்கி அதற்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் மற்றும் மெகசின் ஆகியவற்றை திருடினர் என்றக் குற்றச்சாட்டின்க கீழ், பௌத்த பிக்கும் மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பனாகொட இராணுவ முகாமை அண்டிய சோதனைச் சாவடியில் இருந்து T-56 துப்பாக்கி திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர் ஹோமாகம, கொடகம பிரதேசத்தில் உள்ள விஹாரை ஒன்றில் தங்கியிருந்தவர் எனதெரிவிக்கப்படுகிறது.
பனாகொட இராணுவ முகாமை அண்டிய இராணுவ குடியிருப்பு வளாகத்தின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட இராணுவத்தினரை ஏமாற்றி கடந்த 3 ஆம் திகதி இரவு இவரிடம் இருந்து T 56 துப்பாக்கி, 4 மகசின்கள், 120 தோட்டாக்கள் மற்றும் பாதுகாப்புப் பை என்பன திருடப்பட்டுள்ளன.
திருடப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு பக்க சாலையில் உள்ள ஒரு கற்குகையின் கீழ் 30 திருடப்பட்ட தோட்டாக்கள் அடங்கிய ஒரு மெகசினை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
அதன்பின்னர் அருகில் உள்ள கடையொன்றில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெரா மூலம் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் அடையாளம் காணப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.