மரக்கறிகளின் கையிருப்பு அதிகரிப்பு காரணமாக மரக்கறிகளின் விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் பேலியகொட மானிங் சந்தை வியாபாரிகளிடம் கேட்டபோது, 400 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட போஞ்சி கிலோ ஒன்றின் மொத்த விலை 100 ரூபாவாகவும், 700 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கறி மிளகாய் 250 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
ஒரு கிலோ கெரட் விலை 450 ரூபாவில் இருந்து 100 ரூபாவாகவும், முட்டைகோஸ் கிலோ ஒன்றின் விலை 300 ரூபாவிலிருந்து 50 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.