அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் பதவிக்கு தெரிவு செய்வதற்கான பரீட்சை மார்ச் 25ஆம் திகதி நடைபெற உள்ளது.
இப்பரீட்சையானது நாடளாவிய ரீதியாக உள்ள 341 நிலையங்களில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகளை அனுப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை பரீட்சை திணைக்களம் ஏற்கனவே முன்னெடுத்துள்ளது.
பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களின் பற்றாக்குறைக்கு தேவையான பட்டதாரிகள் கணக்கிடப்பட்டு அந்த வெற்றிடங்களின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும்.
இதனைத் தொடர்ந்து உருவாகும் வெற்றிடங்களுக்கு மாகாண சபைகளின் ஊடாக வருடாந்தம் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.