உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த சட்டமா அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி கர்தினால் மெல்கம் ரஞ்சித் தாக்கல் செய்த ரிட் மனுவை பரிசீலிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.
சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதனையடுத்து, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நாவன மற்றும் மனுதாரரின் சட்டத்தரணிகள் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், உண்மைகளை உறுதிப்படுத்துவதற்கு குறித்த மனுவை மே மாதம் 9ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு உத்தரவிட்டது.