சட்ட முறைமையின் கீழ் பதிவு செய்யப்படாத அதிக இயந்திர வலுகொண்ட மோட்டார் சைக்கிள்களை சட்டரீதியாக பதிவு செய்வதற்கான முறைமையை உடனடியாக தயாரிக்குமாறு, போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு பொருத்தப்படும், 450 சி.சியை விடவும் அதிக இயந்திர வலுகொண்ட மோட்டார் சைக்கிள்களை உரிய முறையில் பதிவு செய்து பயன்படுத்துவதற்கான முறைமையை தயாரிக்குமாறு கோரி ஸ்பீட் ரைடர் மற்றும் விளையாட்டு சங்கங்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையைக் கருத்திற்கொண்டு, அமைச்சரினால் குறித்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.