நுவரெலியா – கந்தப்பளை – சந்திரகாந்தி தோட்டத்திலுள்ள பழமையான தேயிலை தொழிற்சாலை தீ விபத்தில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
பல வருடகாலமாக மூடிய நிலையில் காணப்பட்ட இத் தொழிற்சாலையில் தற்போது கழிவு தேயிலை பதப்படுத்தப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் இன்று (18.03.2023) அதிகாலை தொழிற்சாலையில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டது.
கந்தப்பளை பொலிஸார், தோட்ட மக்கள் மற்றும் நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயை அணைக்க முற்பட்டபோதிலும், தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
தீ விபத்து தொடர்பான விசாரணைகளை கந்தப்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.