அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இந்த வருடம் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அதிகாரம் இல்லையென தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 40 ஆவது சரத்தின்படி, ஐந்தாண்டுகளின் முழு பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு புதிய ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்று அவர் ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிக்கு மட்டுமே இரண்டாவது முறையாக போட்டியிட்டால், முழு பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு வருடத்துக்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தலை நடத்த அதிகாரம் உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.