கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தாமதமாகுவதால், பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்படும் ஏனைய பரீட்சைகளும் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.
2022ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு 2000 ரூபா என்ற கொடுப்பனவு போதுமானதாக அமையாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான நாளாந்த கட்டணம் 3000 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.