Our Feeds


Thursday, March 30, 2023

Anonymous

நாடு அபிவிருத்தியடைய வேண்டுமானால் இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் - ஜனாதிபதி ரனில்

 



நாடு அபிவிருத்தியடைய வேண்டுமானால்  இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று அதனை பிரச்சினையில் இருந்து பிரிக்க முடியாது எனவும்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகத்தினால் நடாத்தப்பட்ட "சர்வதேச நாணய நிதியம் மற்றும் அதற்கு அப்பால்" என்ற தொனிப்பொருளிலான உரையாடலில் பிரதான உரையை ஆற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பசுமைப் பொருளாதாரத்திற்கான இலங்கையின் சாத்தியக்கூறுகள் நன்றாக இருப்பதாகவும், இலங்கை உடனடியாக அதில் இறங்கி அதனை ஆரம்பிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நாட்டின் வளங்களை அதிகமாக வீணடித்த பெற்றோலியக் கூட்டுத்தாபனம், ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் அல்லது மின்சார சபைக்கு ஆதரவளிக்கவன்றி, வரியவர்கள் மற்றும் நலிவடைந்தவர்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கே பணம் தேவைப்படுவதாகவும், ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

டி.எஸ். சேனநாயக்கவின் முன்மொழிவுகளை கட்டியெழுப்பாதது மற்றும் 1965 இல் ஷெனோய் அறிக்கையை நடைமுறைப்படுத்தாதது உட்பட இலங்கையின் அபிவிருத்தியில் தவறவிட்ட வாய்ப்புகளை ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

1978 இல் இனப்பிரச்சினையானது முன்னேற்றத்தைக் குறைத்தது. மேலும் நாடு மீண்டும் தனது நிலைப்பாட்டை எடுப்பதற்கான வாய்ப்பை இழந்தது.

இதுவே இலங்கைக்கு ஒரு தீர்க்கமான தெரிவை மேற்கொண்டு, முன்னோக்கிச் செல்வதற்கு அல்லது மீண்டும் பின்னோக்கிச் செல்லும் அபாயத்தை எதிர்கொள்வதற்கான கடைசி வாய்ப்பு” என்று அவர் கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்கு அப்பால் சென்று அடுத்த தலைமுறைக்கு வளமான சமூகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

ஒருவரையொருவர் குற்றம்சாட்டி நாட்டை வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல முடியாது எனவும் ஜனாதிபதி அங்கு மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »