பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவுக்கு 3 மாத சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்தக் காலத்தின் பின்னர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஸ்பந்து தென்னகோனுக்கு பொலிஸ் மா அதிபர் பதவி வழங்கப்பட உள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் சேவைக் காலம் இன்றுடன் (25) முடிவடையவிருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன மற்றும் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் ஆகியோர் கலந்துகொண்ட கலந்துரையாடலொன்று நேற்று (24) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
இதன்போது பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவுக்கு மூன்று மாத சேவை நீடிப்பு வழங்க வேண்டும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.