Our Feeds


Thursday, March 2, 2023

Anonymous

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக தான் தாக்கல் செய்த உரிமை மீறல் வழக்கை வாபஸ் பெற்றார் பூஜித.

 



ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தம்மை கட்டாய விடுமுறையில் அனுப்பிய முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தீர்மானத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மீளப் பெற்றுக்கொண்டார்.


இந்த மனு நேற்று (01) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​பூஜித் ஜயசுந்தரவின் சட்டத்தரணிகள், இந்த மனுவை பேண வேண்டிய அவசியமில்லை எனவும், அதனை மீளப்பெற அனுமதிக்குமாறும் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.


அப்போது அந்த கோரிக்கையை ஏற்று உயர் நீதிமன்றம் மனுவை செல்லுபடியற்றதாக்கி உத்தரவிட்டது.


உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பின்னர் சட்டத்திற்கு மாறாக கட்டாய விடுப்பு எடுத்ததன் மூலம் தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »