வென்னப்புவ பெரகஸ் சந்தியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த பகுதிக்கு சுற்றிவளைப்பு நடவடிக்கைக்காகச் சென்ற பொலிஸார் மீது நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
இதையடுத்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் கொல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.