Our Feeds


Saturday, March 11, 2023

ShortNews Admin

நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட முக்கிய பதவி!



மேலும் நான்கு துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கான தலைவர்கள் பாராளுமன்றத்தில் நியமிக்கப்பட்டனர்.


அதற்கமைய, சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார்.

அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் அகில எல்லாவல முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் வழிமொழிந்தார்.

அதேபோன்று, பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பதிரன நியமிக்கப்பட்டதுடன், அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில முன்மொழிந்ததுடன், அதனை பாராளுமன்ற உறுப்பினர் கருணாதாச வழிமொழிந்தார்.

இதேவேளை, வலுசக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் நாளக பண்டார கோட்டேகொட நியமிக்கப்பட்டார்.

அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன அதனை வழிமொழிந்தார்.

மேலும், பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தனித்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட நியமிக்கப்பட்டதுடன், அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப் முன்மொழிந்ததுடன், அதனை பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா வழிமொழிந்தார்.

பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி கே. ஜயதிலக்க மற்றும் பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் திணைக்கள பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எச்.ஈ. ஜனகாந்த சில்வா ஆகியோர் இந்தக் கூட்டங்களில் கலந்துகொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »