ஹட்டன் நகரில் கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக முட்டைகளை விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட வாடிக்கையாளர் சேவை அதிகார சபையின் பொறுப்பதிகாரி அமில ரத்நாயக்க தெரிவித்தார்.
ஹட்டன் நகரில் முட்டைகளை விற்பனை செய்யும் வியாபாரிகள் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்வதாக வாடிக்கையாளர்களிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதையடுத்து நேற்று (07) சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமில ரத்நாயக்க தெரிவித்தார்.
ஒரு வெள்ளை முட்டையை அதிகபட்ச சில்லறை விலையாக 44/= க்கும், சிவப்பு முட்டையை அதிகபட்ச சில்லறை விலை 46/= க்கும் விற்பனை செய்ய நுகர்வோர் அதிகாரசபையின் விலைக் கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், ஹட்டன் நகரில் முட்டை விற்பனையாளர்கள் வெள்ளை மற்றும் சிவப்பு நிற முட்டைகளை ரூ.52 முதல் 56 வரை விலையில் விற்பதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.