இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க
உறுப்பினர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்கள் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளையும், ஏனைய பணியாளர்களை கடமையை செய்ய விடாமலும் தடுத்து வருவதாக அரச தரப்பில் குற்றம் சுமத்தப்படுகிறது.
அவ்வாறு எரிபொருள் விநியோகத்தை பாதிக்கும் வகையில் செயற்படுகின்ற CPC பணியாளர்களை கட்டாய விடுமுறையில் அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவர்கள் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய களஞ்சியங்கள் முனையம் ஆகியவற்றுக்கு பிரவேசிக்கவும் தடை விதிக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.