கடந்த வாரத்தில் வேகமாக வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை, தற்போது மீண்டும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, இன்று (13) காலை புறக்கோட்டை-செட்டியார் தெரு தங்கச் சந்தையில் 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை ரூ. 160,000 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வியாழக்கிழமை (09) 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை ரூ. 134,000 ஆக குறைந்துள்ளது.
இதனிடையே கடந்த வியாழக்கிழமை 24 காரட் தங்கம் ஒரு பவுணின் விலை ரூ. 145,000 ஆக காணப்பட்டிருந்த நிலையில், தற்போது 173,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக புறக்கோட்டை-செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.