காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள நாவலப்பிட்டி பஸ்பாகே கோரளே ஹைன்போர்ட் தோட்டக்காணியில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்திற்கு உள்ளானவர்களுக்கு காணிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளே பிரதேசத்தில் அமைந்துள்ள 566 ஏக்கர்களுடன் கூடிய ஹைன்போர்ட் தோட்டக்காணி காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவை கருத்திற்கொண்டு, குறித்த காணியில் 200 ஏக்கர் காணியை வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்திற்கு உள்ளானவர்களுக்கு மற்றும் அவ்வாறான இடர்களுக்கு ஆளாகக்கூடிய அதிக ஆபத்தான வலயங்களில் வசிக்கின்ற குடும்பங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.