தொலைபேசி உள்ளிட்ட தொலைத்தொடர்பு உபகரணங்களை விற்பனை செய்யும் 99% வீதமான இடங்கள் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிடம் இருந்து வர்த்தக அனுமதிப்பத்திரம் பெறவில்லை என தெரியவந்துள்ளது.
தொலைபேசி உள்ளிட்ட தொலைத்தொடர்பு உபகரணங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்யும் போது தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிடம் இருந்து வர்த்தக அனுமதியைப் பெற வேண்டும்.
வர்த்தக அனுமதிப்பத்திரம் இன்றி யாராவது தொலைத்தொடர்பு உபகரணங்களை விற்பனை செய்தால், அது தொடர்பில் விசாரணை நடத்துவது தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பொறுப்பாகும் என அதன் பணிப்பாளர் (இணக்கம் மற்றும் விசாரணைகள்) தெரிவித்துள்ளார் .