இன்ஸ்டாகிராம் மூலம் வேலைக்கு விண்ணப்பித்த டெல்லியைச் சேர்ந்த ஹரன் பன்சால் தினமும் வீட்டிலிருந்து வேலை செய்து பெரும் பணம் சம்பாதிப்பது எப்படி என்று பதிவிடப்பட்டிருந்த ஒரு லிங்க்கை க்ளிக் செய்ததால் 9 இலட்சத்து 32 ஆயிரம் ரூபா பணத்தை இழந்துள்ளார்.
இந்த வழக்கில் 2 பேரை டெல்லி பொலிஸாரை் கைது செய்துள்ளனர். முதலீடு செய்த தொகையில் 30 சதவீதம் வருமானம் தருவதாக இணையவழி மூலம் மோசடி நடைபெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பன்சால் சுமார் 9 இலட்சத்து 32 ஆயிரம் ரூபாவை வைப்புச் செய்துவிட்டு பணத்தை எடுக்க முடியாததால் பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கியுள்ளார்.