Our Feeds


Tuesday, March 28, 2023

SHAHNI RAMEES

கொழும்பில் 90 வீத மரணங்கள் மாரடைப்பால் ஏற்படுகின்றன..!

 

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சுமார் தொண்ணூறு வீதமான (90%) மரணங்கள் மாரடைப்பினால் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.



கொழும்பு மாநகரசபை பகுதியில் ஒவ்வொரு வாரமும் மாரடைப்பு காரணமாக சுமார் பதினைந்து மரணங்கள் பதிவாகுவதாக கொழும்பு மாநகர மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர தெரிவித்துள்ளார்.



முப்பது முதல் எண்பது வயதுக்குட்பட்டவர்களே பெரும்பாலும் மாரடைப்பால் இறப்பதாக தெரியவந்துள்ளது. கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வாறான உயிரிழப்புகள் அதிகம் என கொழும்பு மாநகர விபத்து மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர தெரிவித்துள்ளார்.



பெரும்பாலான சந்தர்ப்பங்களில், சிறிய மார்பு வலியை அலட்சியம் செய்வதும், எண்ணெய் உணவுகளை சாப்பிடுவதும் அதிக மாரடைப்புக்கு வழிவகுப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.



கூடுமானவரை அடிக்கடி உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் காட்டினால் மாரடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம் என்றும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »