ஜெர்மன் நாட்டின் ஹம்பர்க் நகரில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த மத வழிபாட்டு தலத்தில் பிரார்த்தனை, ஆலோசனை கூடம் உள்ளது.
இந்நிலையில், இந்த வழிபாட்டு தலத்திற்குள் நேற்று நுழைந்த நபர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.
இந்த துப்பாக்கி சூட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த இந்த துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
துப்பாக்கி சூடு நடத்திய நபரும் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.