Our Feeds


Friday, March 17, 2023

News Editor

துபாயில் 700 அடி உயர கட்டடத்தின் மாடியில் விமானத்தை தரையிறக்கி சாகசம்..!


 போலந்து நாட்டு  விமானியான லியூக் ஜெப்பிலா (Luke Czepiela), துபாயில் உள்ள 700 அடி உயர கட்டடத்தின் மாடியில் சிறிய ரக விமானத்தை தரையிறக்கி சாகசம் செய்துள்ளார்.

புர்ஜ் அல் அராப் என்ற அந்த 56 மாடி சொகுசு விடுதியின் மீது 90 அடி விட்டளவில் ஹெலிகொப்டர்கள் தரையிறங்குவதற்கும் புறப்படுவதற்கும் ஒரு இடம் (Helipad) அமைக்கப்பட்டுள்ளது.

ஹெலிகொப்டர்கள் தரையிறங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட அந்த இடத்தில், லியூக் ஜெப்பிலா சிறிய ரக விமானத்தை நேர்த்தியாகத் தரையிறக்கினார்.

இந்த அபாயகரமான சாகசத்தை நிகழ்த்த, லியூக் ஜெப்பிலா, சுமார் 650 முறை விமானத்தை அங்கு தரையிறக்கி கடினமாக பயிற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »